தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், 2026ல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். தற்போது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார் விஜய். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை தவெக கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23 ஆம் தேதி மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார்.
விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28ஆம் தேதி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை ஆய்வு செய்த காவல் துறையினர், மாநாடு நடத்துவதற்கு நடைமுறை வழிகாட்டுதல் எதுவும் குறிப்பிடவில்லை என்பதால் 21 கேள்விகள் கேட்டு கட்சிக்கு நோட்டீஸ்

Leave a comment